TNPSC Thervupettagam

CISF எழுச்சி தினம் – மார்ச் 10

March 13 , 2021 1266 days 481 0
  • மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் எழுச்சி தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது நாட்டில் தொழிற்துறை நிறுவனங்களின் சிறந்த முறையிலான பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
  • CISF ஆனது நாடு முழுவதும் அமைந்துள்ள 300 தொழில் துறை அலகுகள், அரசுக் கட்டுமானத் திட்டங்கள் மற்றும் வசதிகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக அறியப்படுகின்றது.
  • CISF எழுச்சி தினமானது பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக 2800 பணியாளர்களுடன் 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து, CISF ஆனது 1983 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின் மூலம் இந்திய ஆயுதப் படையாக மாற்றப் பட்டது.

CISF

  • CISF ஆனது நாட்டில் உள்ள 6 துணை இராணுவப் படைகளில் ஒன்றாகும்.
  • இது இந்தியாவில் உள்ள ஒரு மத்திய ஆயுதக் காவல் துறையாகும்.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்