மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (Central Industrial Security Force - CISF) நிறுவன தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 10-ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடம் அது உருவான 50-வது வருடத்தை அனுசரிக்கின்றது.
1969-ம் ஆண்டு இத்தினத்தன்று 2800 படை வீரர்களுடன் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு சட்டத்தின் மூலம் இந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டது.
இப்படை 1983 ஆம் ஆண்டு ஜுன் 15-ம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட மற்றொரு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இந்தியக் குடியரசின் ஆயுதம் தாங்கிய படையாக மாற்றப்பட்டது.
இது நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றது. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.