நாட்டின் மிக முக்கிய உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் மற்றும் பொதுப் பாதுகாப்பை நிலை நிறுத்தும் CISF பணியாளர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு இத்தினம் கௌரவமளிக்கிறது.
1968 ஆம் ஆண்டு CISF சட்டத்தின் கீழ் மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை என்பது உருவாக்கப்பட்டு, 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
அவை பொதுத்துறை முன்னெடுப்புகள், தொழில்துறை மையங்கள் மற்றும் அரசாங்க உள்கட்டமைப்பு அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
இது 188,000 உறுப்பினர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக உள்ளது.