TNPSC Thervupettagam

CISFன் 49வது நிறுவன தினம் – மார்ச் 10

March 16 , 2018 2444 days 589 0
  • மார்ச் 10 அன்று நாடு முழுவதும் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையின் (Central Industrial Security Force -CISF) 49-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
  • புதுதில்லியில் தன்னுடைய தலைமையகத்தைக் கொண்டுள்ள மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர்  மத்திய ஆயுத காவற் படையாகும் (CAPF- central armed police force).
  • மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது  தொடக்கத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காக (PSUs-Public sector Undertakings) 1968-ஆம் ஆண்டு மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை சட்டத்தின் கீழ்  (Central Industrial Security Force Act, 1968) உருவாக்கப்பட்டது.
  • எனினும் 1983-ஆம் ஆண்டு இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் (Amendment) மூலம், மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது   பெரிய அதிகார பணி வரம்புடைய ஓர் ஆயுதப் படையாக (armed force)  மாற்றப்பட்டது.
  • தீ விபத்துகளை எதிர்கொள்ள இப்படையில் தீ தடுப்புப் பிரிவு (Fire wing) ஒன்றும் உள்ளது.
  • தற்போது இதன் பொது இயக்குநராக ஐ.பி.எஸ் அதிகாரியானP. சிங் உள்ளார்.
  • இவை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றன. மேலும்  மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது      பேரிடர் மேலாண்மை பணிகளிலும் ஈடுபடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்