TNPSC Thervupettagam

CITES அமைப்பின் 19வது பங்குதாரர்கள் மாநாடு - செந்தலை கொண்ட செந்நிற ஓடு உடைய ஆமை

November 23 , 2022 606 days 257 0
  • பனாமாவில் CITES அமைப்பின் 19வது பங்குதாரர்கள் மாநாடானது (COP19) நடைபெற்றது.
  • அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையானது வாஷிங்டன் மாநாடு என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது உலக வனவிலங்கு மாநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
  • அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு சர்வதேச ஒப்பந்தமான இதனை நடைமுறைப் படுத்துவதற்கான கடமையானது அதன் ஒப்பந்ததார நாடுகளின் மீது சட்டப் பூர்வமாக பிணைக்கப் பட்டுள்ளது.
  • வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் ஆனது அந்த உயிரினங்களின் வாழ்வை அச்சுறுத்துவதில்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • இந்த CITES உடன்படிக்கையின் கீழ் செந்தலை கொண்ட செந்நிற ஓடு உடைய ஆமையின் (படகுர் கச்சுகா) பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா ஒரு முன் மொழிதலை முன்வைத்துள்ளது.
  • இது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நன்னீர் வாழ் ஊர்வன இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்