TNPSC Thervupettagam

CITES RST பட்டியல் - இந்தியா

November 18 , 2023 246 days 179 0
  • அருகி வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் (CITES) தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ், செம்மரக் கட்டைகளுக்கான முக்கிய வர்த்தக (RST) மதிப்பாய்விலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது.
  • ஏற்றுமதி செய்வதற்காக செம்மரக் கட்டைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.
  • 2004 ஆம் ஆண்டு முதல் செம்மரக் கட்டைகளுக்கான முக்கிய வர்த்தக மதிப்பாய்வு (RST) செயல்முறையின் கீழ் இந்தியா கட்டுப்பட்டு இருந்தது.
  • CITES RST செயல்முறையானது, தங்கள் கடமைகளை நிறைவேற்றாத நாடுகளுக்கு வர்த்தக இடைநிறுத்தம் வடிவிலான ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையை செயல் படுத்துகிறது.
  • அதிக சந்தை மதிப்புள்ள மரமான செம்மரக் கட்டைகள் ஆனது (ப்டெரோகார்பஸ் சாண்டாலினஸ்) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே காணப் படுகிறது.
  • இந்தியா, 1976 ஆம் ஆண்டு முதல் CITES ஒப்பந்தத்தின் உறுப்பினர் நாடாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்