TNPSC Thervupettagam

CITES உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவு

March 13 , 2023 625 days 334 0
  • அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் தாவர உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையானது (CITES) 1973 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
  • CITES என்பது, அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல் பாகங்கள் மற்றும் அவற்றிலிருந்துப் பெறப்படும் தருவிப்புகள் உட்பட அவற்றின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதையும் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • CITES உடன்படிக்கையின் கீழ், அனுமதி வழங்கீடு மற்றும் ஒதுக்கீட்டு முறை ஆகியவை மூலம் அழிந்து வரும் உயிரினங்களின் வர்த்தகத்தினை உறுப்பினர் நாடுகள் ஒழுங்கு படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டும்.
  • மேலும் அவை இந்த உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்தச் செய்வது குறித்து தவறாமல் அறிக்கை அளிக்க வேண்டும் என்பதோடு, மேலும், அதன் செயல்திறனை உறுதி செய்வதற்காக மற்ற நாடுகளுடன் இணைந்து அவை செயல்பட வேண்டும்.
  • சர்வதேச வர்த்தகத்தின் காரணமாக, சுரண்டலுக்கு (அதிகப் பாதிப்பிற்கு) உள்ளாகும் கிட்டத்தட்ட 40,000 இனங்களை இந்த உடன்படிக்கை பாதுகாக்கிறது.
  • தற்போது, CITES உடன்படிக்கையில் 184 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்