வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) குறித்த உறுப்பு நாடுகளின் 18வது கருத்தரங்கானது (CoP18) சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது.
ஆற்று நீர் நாயை (லுட்ரோகேல் பெர்சிபிசில்லட்டா) CITESயின்பட்டியல் II இலிருந்து CITESயின்பட்டியல் I க்கு மாற்ற இங்கு முடிவு செய்யப்பட்டது.
டோக்காய் கெக்கோ (கெக்கோ கெக்கோ) CITESயின்பட்டியல் II இல் சேர்க்கப்பட இருக்கின்றது.
இந்திய நட்சத்திர ஆமை CITESயின்பட்டியல் Iக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.இது வணிகம் சார்ந்த வர்த்தகத்திலிருந்து சர்வதேசப் பாதுகாப்பின் மிக உயர்ந்த நிலையை அதற்கு அளித்துள்ளது.