TNPSC Thervupettagam

CITIIS 2.0 திட்டம்

June 5 , 2023 414 days 303 0
  • புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மை (CITIIS) ஆகியவற்றிற்கான நகர முதலீடுகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழான ஒரு திட்டமாகும்.
  • CITIIS என்பது புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மை (CITIIS) ஆகியவற்றிற்கான நகர முதலீடுகள் என்பதைக் குறிக்கும்.
  • இது ஒருங்கிணைந்தக் கழிவு மேலாண்மை மற்றும் பருவநிலைச் சார்ந்தச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போட்டித் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 18 நகரங்களில் CITIIS திட்டத்தின் இரண்டாம் கட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (AFD), கிரெடிடான்ஸ்டால்ட் ஃபர் வீடராவ்பௌ (KfW), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் (NIUA) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்