இந்தூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம், நாசா-கால்டெக் மற்றும் ஸ்வீடனின் கோதன்பர்க் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து CL-Flam எனப்படும் குறைந்த விலை ஒளிப்படக் கருவி அமைப்பை உருவாக்கியுள்ளன.
இது ஒற்றை DSLR ரக ஒளிப்படக் கருவியினைப் பயன்படுத்தி ஒரு சுடரில் உள்ள நான்கு இரசாயன வகைகளின் பல் நிறமாலைப் படத்தினை வழங்கக் கூடியது.
முன்னதாக அறிவியல் சார்ந்த படத்தினைப் பெறுவதற்கு நான்கு ஒளிப்படக் கருவிகள் கொண்ட சிக்கலான அமைப்பு தேவைப்பட்டது.