அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் போர்ட் பிளேர் கடற்கரையில் “Clean Sea 2017” எனும் மண்டல அளவிலான கடல் எண்ணெய் கசிவு மாசுபாட்டு பதிலெதிர்ப்பு பயிற்சியை இந்திய கடலோர காவற்படை நடத்தியுள்ளது.
தேசிய அவசரகால எண்ணெய் கசிவு பேரிடர் பதிலெதிர்ப்பு திட்டத்தின் (National Oil Spill Disaster Contigency Plan (Nos-DCP) கூறுகளோடு ஒத்திசைந்து எண்ணெய் கசிவுகளின் பேரிடருக்கு பதிலெதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உள்ள இந்திய கடலோர காவற் படை, பிற மூல ஆதார நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தயார்நிலையை வெளிக்காட்டுவதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுகின்றது.
இந்திய கடலோர காவற் படையானது இந்திய கடற்மண்டலங்களின் கடற் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முக்கிய பொறுப்பாளி ஆகும். மேலும் இது இந்திய கடற் எல்லைகளில் நிகழும் எண்ணெய் கசிவுகளுக்கான பதிலெதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகார அமைப்பாகும்.
எண்ணெய் கசிவு பதிலெதிர்ப்புக்கென தேசிய எண்ணெய் கசிவு அவசரகால பதிலெதிர்ப்பு திட்டத்தை இந்திய கடலோர காவற் படை வகுத்துள்ளது.
இதன் மூன்று மாசுபாட்டு பதிலெதிர்ப்பு மையங்கள் மும்பை, சென்னை மற்றும் போர்ட் பிளேரில் உள்ளன.