மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் தக்காளி விவசாயிகள் அப்பயிர்களின் மகசூல் இழப்பிற்கு இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் காரணமாக உள்ளதாக கூறுகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் தக்காளிப் பயிர்கள் வெள்ளரித் தேமல் நச்சுயிரி (CMV) தாக்குதலால் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
கர்நாடகா மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களதுப் பயிர் இழப்பிற்கு தக்காளி தேமல் நச்சுயிரி (ToMV) தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
பயிர்களில் ஒரே மாதிரியான சேதத்தை ஏற்படுத்துகின்ற இந்த இரண்டு தாவர நோய்க் கிருமிகளும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டுள்ளன.
ஆனால் அவை வெவ்வேறு வைரஸ் குடும்பங்களைச் சேர்ந்தவை என்பதோடு அவை வெவ்வேறு விதமாக பரவுகின்றன.
ToMV வைரசானது, விர்காவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் புகையிலை தேமல் வைரஸுடன் (TMV) நெருங்கிய தொடர்புடையது ஆகும்.
ToMV வைரசானது தக்காளி, புகையிலை, மிளகு மற்றும் சில அலங்காரச் செடிகள் ஆகியவற்றினைத் தாக்குகிறது.