TNPSC Thervupettagam

CMV மற்றும் ToMV வைரஸ்கள்

July 10 , 2023 377 days 280 0
  • மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் தக்காளி விவசாயிகள் அப்பயிர்களின் மகசூல் இழப்பிற்கு இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் காரணமாக உள்ளதாக கூறுகின்றனர்.
  • மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் தக்காளிப் பயிர்கள் வெள்ளரித் தேமல் நச்சுயிரி (CMV) தாக்குதலால் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
  • கர்நாடகா மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களதுப் பயிர் இழப்பிற்கு தக்காளி தேமல் நச்சுயிரி (ToMV) தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
  • பயிர்களில் ஒரே மாதிரியான சேதத்தை ஏற்படுத்துகின்ற இந்த இரண்டு தாவர நோய்க் கிருமிகளும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டுள்ளன.
  • ஆனால் அவை வெவ்வேறு வைரஸ் குடும்பங்களைச் சேர்ந்தவை என்பதோடு அவை வெவ்வேறு விதமாக பரவுகின்றன.
  • ToMV வைரசானது, விர்காவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் புகையிலை தேமல் வைரஸுடன் (TMV) நெருங்கிய தொடர்புடையது ஆகும்.
  • ToMV வைரசானது தக்காளி, புகையிலை, மிளகு மற்றும் சில அலங்காரச் செடிகள் ஆகியவற்றினைத் தாக்குகிறது.
  • CMV வைரசானது வெள்ளரி, முலாம்பழம், கத்திரிக்காய், தக்காளி, கேரட், சுருள்கோசு, செலரி, வெள்ளரி போன்றவற்றைத் தாக்கக் கூடியது ஆகும்.
  • 1934 ஆம் ஆண்டில் வெள்ளரிக்காயில் CMV கண்டறியப் பட்டதால் இந்த ஒரு வைரசிற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.
  • ToMV முக்கியமாக வைரஸ் பாதிக்கப்பட்ட விதைகள், மரக் கன்றுகள், விவசாயக் கருவிகள் மற்றும் பெரும்பாலும் நாற்றங்கால் பணியாளர்கள் மூலம் பரவுகிறது.
  • ஊட்டத்தினை உறிஞ்சும் பூச்சிகளான அசுனிகளால் CMV பரவுகிறது.
  • CMV மனிதத் தொடுதல் மூலமாகவும் பரவக் கூடியது, ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்