புனேவை அடிப்படையாகக் கொண்ட இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கமானது 15% மெத்தனாலைப் பெட்ரோலுடன் கலந்து 3000 கிமீ தொலைவுக்கு வாகனங்களை இயக்கி ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வானது தற்போதுள்ள BS-IV தரநிலையிலுள்ள கார்களில் மெத்தனால் கலந்து பெட்ரோல் பயன்படுத்தப்படும்போது CO2 உமிழ்வானது கணிசமாக குறைவதை வெளிப்படுத்தியுள்ளது.
உண்மையான கள நிலைகளில் உமிழ்வை மதிப்பீடு செய்வதும் அதே நேரத்தில் வாகனங்களின் செயல்திறன்களை சோதனை செய்வதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
மேலும் இந்த ஆய்வானது சிறிதளவு நைட்ரஜன் ஆக்சைடுகளை அதிகரிக்கும் போது ஹைட்ரோ கார்பன் உமிழ்வானது சற்றே குறைகிறது எனவும் கண்டறிந்துள்ளது.