சமீபத்திய ஆராய்வின் படி, கார்பன் வெளியீட்டின் அதிகரிப்பானது மீன்கள் வாழும் தண்ணீரை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுவதால் மீன்கள் தமது மோப்பசக்தியினை இழந்து வருகின்றன.
கடல்நீரினால் உறிஞ்சப்படும் CO2 கார்போனிக் அமிலத்தினை உருவாக்குகிறது.
1800களிலிருந்து கடலில் உள்ள CO2ன் அளவு 43 சதவீதம் உயர்ந்துள்ளது. இது இந்நூற்றாண்டின் இறுதியில் தற்போதுள்ள அளவை விட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடலில் உள்ள அமிலத்தன்மை காரணத்தினால், மீன்கள் தமது மோப்ப சக்தியின் ஒரு பகுதியினை இழந்து, வாழ்வதற்கே கடினமான நிலையினை ஏற்படுத்திக் கொள்ளும்.