TNPSC Thervupettagam

CO2 உட்செலுத்துதல் தொழில்நுட்பம்- கந்தார் எண்ணெய் வயல்

February 17 , 2018 2475 days 782 0
  • மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ONGC நிறுவனம் (ONGC - Oil and Natural Gas Corporation) குஜராத்தில் உள்ள கந்தார் எண்ணெய் வயலில் (Gandhar Oil Field) கார்பன்-டை-ஆக்ஸைடு உட்செலுத்தல் தொழிற்நுட்பத்தை (CO2 Injection technology) அறிமுகப்படுத்த உள்ளது.
  • இதுவே ஆசியாவின் மிகப்பெரிய அளவிலான முதல் CO2 உட்செலுத்தல் திட்டமாகும்.
  • மேம்படுத்தப்பட்ட எண்ணெய் மீட்டெடுப்பு திட்டத்தின்(EOR - Enhanced oil recovery programme) கீழ் கூடுதலாக 20 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை எடுப்பதற்காக (Barrels of Crude Oil) இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

CO2 உட்செலுத்துதல் தொழில்நுட்பம்

  • பழைமையாகி வரும் எண்ணெய் வயல்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய, உலக அளவில் நிரூபணம் செய்யப்பட்ட ஓர் அறிவியல் தொழில்நுட்பமே CO2 உட்செலுத்தல் தொழில்நுட்பமாகும்.
  • மொத்த எண்ணெய் உற்பத்தி குறைந்து கொண்டே வரும் பழமையான எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் மீதங்களுடன் (Residual Oil) சேர்த்து கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு எண்ணெய் உறிஞ்சு குழாயின் வழியே உட்செலுத்தப்படும்.
  • இவை பாறைத் துளைகளில் உள்ள எண்ணெயின் பாகியல் தன்மையைக் குறைப்பதால் எண்ணெய் பாறைத் துளைகளை விட்டு வெளியேறுவது எளிதாகும்.
  • மேலும் CO2 வாயுவானது எண்ணெய்யை விரிவடையச் செய்வதால் பிரித்தெடுத்தலுக்காக அவை உற்பத்தி கிணறுகளை நோக்கி தள்ளப்படும். இதன் மூலம் எளிதாக எண்ணெய்யை உறிஞ்சி உற்பத்தியைப் பெருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்