TNPSC Thervupettagam

CO2 உமிழ்வைக் குறைக்க மெத்தனால் கலவை

January 23 , 2019 2005 days 641 0
  • புனேவை அடிப்படையாகக் கொண்ட இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கமானது 15% மெத்தனாலைப் பெட்ரோலுடன் கலந்து 3000 கிமீ தொலைவுக்கு வாகனங்களை இயக்கி ஆய்வு செய்துள்ளது.
  • இந்த ஆய்வானது தற்போதுள்ள BS-IV தரநிலையிலுள்ள கார்களில் மெத்தனால் கலந்து பெட்ரோல் பயன்படுத்தப்படும்போது CO2 உமிழ்வானது கணிசமாக குறைவதை வெளிப்படுத்தியுள்ளது.
  • உண்மையான கள நிலைகளில் உமிழ்வை மதிப்பீடு செய்வதும் அதே நேரத்தில் வாகனங்களின் செயல்திறன்களை சோதனை செய்வதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
  • மேலும் இந்த ஆய்வானது சிறிதளவு நைட்ரஜன் ஆக்சைடுகளை அதிகரிக்கும் போது ஹைட்ரோ கார்பன் உமிழ்வானது சற்றே குறைகிறது எனவும் கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்