TNPSC Thervupettagam

CO2விலிருந்து CO ஆக மாற்றம்

November 11 , 2023 381 days 315 0
  • புதைபடிவ-எரிபொருள் சார்ந்த மின் நிலைய உமிழ்வில் வெளியாகும் கரியமில வாயு அளவைக் கணிசமாகக் குறைக்கக் கூடிய ஒரு அறை-வெப்பநிலை முறையை ஆராய்ச்சியாளர்கள் செயல்விளக்கிக் காட்டியுள்ளனர்.
  • இந்த எதிர்வினையில், திடமான கார்பன் அணுக்கள் கார்பன் டை ஆக்சைடு வாயுவில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுள் ஒன்றில் இணைந்து, அதனை கார்பன் மோனாக்சைடாக மாற்றுகிறது.
  • இந்தப் பரிமாற்றத்திற்கு பொதுவாக அதிக வெப்ப வடிவிலான - குறைந்தபட்சம் 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை- கணிசமான அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
  • எனவே வெப்பத்திற்குப் பதிலாக, தனிப்பட்ட அலுமினிய நுண் துகள்களில் உலாவக் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட மேற்பரப்பு பிளாஸ்மோன்கள் (LSPs) எனப்படும் எலக்ட்ரான்களின் அலைவு அலைகளிலிருந்து பெறப்பட்ட ஆற்றலை அக்குழு எடுத்துக் கொண்டு இந்தச் செயல்முறையை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்