May 19 , 2020
1654 days
854
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் COBAS 6800 ஆர்டி-பிசிஆர் உபகரணத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- இந்த சாதனமானது முழுவதும் தானியங்கு தன்மையுடையதாகவும் உயர் செயல்திறன் கொண்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
- இந்தச் சாதனமானது நாட்டின் சோதனையிடும் திறனை அதிகரிக்க உதவ இருக்கின்றது.
- இது 1200 மாதிரிகளின் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்டது.
- இது தில்லியில் உள்ள தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் பொருத்தப் பட்டுள்ளது.
- இந்தச் சாதனமானது ஹெபடைடிடிஸ், சலமைடியா, எச்ஐவி, பாபிலோமா, எம்டிபி, சிஎம்வி, நைசீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கண்டறியும் திறன் கொண்டது.
- இந்தச் சாதனமானது ரோச்சி நோய்க் கண்டறிதல் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டு உள்ளது.
Post Views:
854