இந்தியா, அமெரிக்காவுடன் இரண்டாவது பாதுகாப்பு அடிப்படை உடன்படிக்கையான COMCASA உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளது. COMCASA என்பது தொலைத்தொடர்புகள், இணக்கத் தன்மை, பாதுகாப்பு ஒப்பந்தமாகும் (The Communications, Compatibility, Security Agreement - COMCASA).
COMCASA ஒப்பந்தம் திறனாய்வு தொடர்பான பாதுகாப்பான, மறைகுறியாக்கப்பட்ட (Critical, Secure, Encrypted) பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை இந்திய ராணுவம் மற்ற நாடுகளிலிருந்து பெறுவதற்கு உதவும்.
COMCASA இதற்கு முன்னர் CISMOA (Communications & Information on Security Memorandum of Agreement – CISMOA) - தொலைத்தொடர்புகள் & தகவல் தொடர்பான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் என அறியப்பட்டது.
அமெரிக்காவின் முக்கியப் பாதுகாப்பு கூட்டாளியாக இருக்கின்ற போதிலும், மூன்று அதிகாரம் சார்ந்த (Mandatory) ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதென்பது இந்தியாவிற்கு முக்கியமானதாகும்.
இதுவரை அமெரிக்காவுடன் தளவாடங்கள் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படை ஒப்பந்தத்தில் (LEMOA - Logistics Exchange Memorandum of Agreement) மட்டுமே இந்தியா கையெழுத்திட்டுள்ளது. பல ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் 2016ல் கையெழுத்தானது.
இந்தியாவின் மீது கவனம் செலுத்தும் LEMOA என்பது, தளவாட ஆதரவு ஒப்பந்தத்தின் (Logistics Support Agreement - LSA) திருத்தப்பட்ட பதிப்பாகும். இது எரிபொருள் நிரப்புதல் தொடர்பாக இரு நாடுகளும் (இந்தியா & அமெரிக்கா) ஒன்றுக்கொன்று இராணுவ வசதிகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு வகை செய்யும்.
COMCASA & அடிப்படை பரிமாற்றம் மற்றும் நிலப்பரப்புப் கூட்டுறவிற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement for Geospatial Cooperation - BECA) ஆகிய இரண்டும் கையெழுத்திடப்படாத மற்ற உடன் படிக்கைகளாகும்.