TNPSC Thervupettagam

COP 29 - புதிய கூட்டு அளவு சார் இலக்கு (NCQG)

November 18 , 2024 10 days 95 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு (COP29) ஆனது புதிய கூட்டு அளவு சார் இலக்கின் (NCQG) புதிய வரைவினை வெளியிட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சுமார் 5-6.8 டிரில்லியன் டாலர் வரவினைப் பெற்றுத் தருவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • முன்னதாக வெளியிடப்பட்ட இதன் முதல் பதிப்பு ஆனது வளர்ந்து வரும் நாடுகளால் நிராகரிக்கப் பட்டது.
  • வளர்ந்து வரும் நாடுகளுக்கு அவற்றின் தனித்துவமானப் பருவநிலை தகவமைப்பு மற்றும் நிகர சுழிய மாற்றத்திற்கு ஆண்டிற்கு 1.5 டிரில்லியன் டாலர் வரை தேவைப் படுகிறது.
  • இருப்பினும், பருவநிலை நடவடிக்கைக்கான உண்மையான நிதித் தேவையானது 1-1.5 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பீட்டை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.
  • 153 வளர்ந்து வரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2030 ஆம் ஆண்டில் மொத்தம் 5.8-5.9 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று UNFCCC நிதி நிலைக்குழு மதிப்பிட்டுள்ளது.
  • உலக வங்கி உட்பட 10 பன்னாட்டு மேம்பாட்டு வங்கிக் குழு, தங்களின் ஒட்டு மொத்தப் பருவநிலை நிதி ஒதுக்கீடு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 170 பில்லியன் டாலரை எட்டும் என்று கணித்துள்ளன.
  • 70 சதவீதத்திற்கும் அதிகமானத் தொகையானது (120 பில்லியன் டாலர்) குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சில நாடுகளுக்கு வழங்கப்பட நேரிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்