COP29 மாநாட்டின் போது ஒரு "உலகளாவிய ஆற்றல் செயல் திறன் கூட்டணியை" நிறுவுவதற்கான மிக இலட்சிய மிக்கதொரு முன்னெடுப்பினை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டது.
இந்த நடவடிக்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ஆற்றல் செயல் திறன் விகிதங்களை இரட்டிப்பாக்குவதையும், கணிசமான உமிழ்வு குறைப்புகளுக்கு பெரும் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் ஆனது, தனது ஆற்றல் செயல்திறன், தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது மற்றும் தனியார் துறையுடன் பயனுள்ள கூட்டாண்மை மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அதன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கூட்டணிக்குத் தலைமை தாங்க திட்டமிட்டுள்ளது.