ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு (COP29) ஆனது புதிய கூட்டு அளவு சார் இலக்கின் (NCQG) புதிய வரைவினை வெளியிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சுமார் 5-6.8 டிரில்லியன் டாலர் வரவினைப் பெற்றுத் தருவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட இதன் முதல் பதிப்பு ஆனது வளர்ந்து வரும் நாடுகளால் நிராகரிக்கப் பட்டது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு அவற்றின் தனித்துவமானப் பருவநிலை தகவமைப்பு மற்றும் நிகர சுழிய மாற்றத்திற்கு ஆண்டிற்கு 1.5 டிரில்லியன் டாலர் வரை தேவைப் படுகிறது.
இருப்பினும், பருவநிலை நடவடிக்கைக்கான உண்மையான நிதித் தேவையானது 1-1.5 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பீட்டை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.
153 வளர்ந்து வரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2030 ஆம் ஆண்டில் மொத்தம் 5.8-5.9 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று UNFCCC நிதி நிலைக்குழு மதிப்பிட்டுள்ளது.
உலக வங்கி உட்பட 10 பன்னாட்டு மேம்பாட்டு வங்கிக் குழு, தங்களின் ஒட்டு மொத்தப் பருவநிலை நிதி ஒதுக்கீடு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 170 பில்லியன் டாலரை எட்டும் என்று கணித்துள்ளன.
70 சதவீதத்திற்கும் அதிகமானத் தொகையானது (120 பில்லியன் டாலர்) குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சில நாடுகளுக்கு வழங்கப்பட நேரிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.