உலக கார்பன் திட்ட அறிவியல் குழுவானது இந்தப் புதிய ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களில் இருந்து வெளிவரும் உலகளாவிய கார்பன் உமிழ்வு ஆனது 2024 ஆம் ஆண்டில் இது வரை இல்லாத வகையில் அதிகப்பட்ச அளவை எட்டி உள்ளது.
இந்த அறிக்கையில் புதைபடிவ கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வுகள் சுமார் 37.4 பில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இது 2023 ஆம் ஆண்டில் இருந்த ஒரு அளவை விட 0.8% அதிகமாகும்.
நிலப் பயன்பாட்டு மாற்றம் காரணமான (காடழிப்பு போன்றவை) உமிழ்வு சுமார் 4.2 பில்லியன் டன்கள் ஆகும்.
மொத்த CO2 உமிழ்வுகள் 2024 ஆம் ஆண்டில் 41.6 பில்லியன் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 40.6 பில்லியன் டன்களாக இருந்தது.
சீனாவின் உமிழ்வுகள் (உலகளாவிய மொத்த உமிழ்வில் 32%) ஆனது 0.2% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் உமிழ்வுகள் (உலகளாவிய மொத்த உமிழ்வில் 13%) 0.6% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உமிழ்வுகள் (உலகளாவிய மொத்த உமிழ்வில் 8%) 4.6% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உமிழ்வுகள் (உலகளாவிய மொத்த உமிழ்வில் 7%) 3.8% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் இன்ன பிற பகுதிகளின் உமிழ்வுகள் (உலகளாவிய மொத்த உமிழ்வில் 38%) சுமார் 1.1% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல CO2 அளவுகள் ஆனது, 2024 ஆம் ஆண்டில் மில்லியனுக்கு 422.5 பாகங்களை (ppm) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் இருந்த ஒரு அளவினை விட 2.8 ppm அதிகம் ஆகும் மற்றும் தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைகளை விட 52% அதிகம் ஆகும்.