TNPSC Thervupettagam

COP25 காலநிலை உச்சி மாநாடு

December 12 , 2019 1813 days 991 0
  • காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) அல்லது COP25க்கான பங்காளர் மாநாட்டின் 25வது பதிப்பானது ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடத்தப்பட்டது.
  • 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இறுதி செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
  • இறுதியாக, 75 நாடுகள் 2020 ஆம் ஆண்டிற்குள் 2050 ஆம் ஆண்டின் நிகர சுழிய கார்பன் உமிழ்வு உத்திகளை வழங்க உறுதி பூண்டுள்ளன.
  • இது பின்வரும் அறிக்கைகளை பரிசீலிக்க இருகின்றது. அவையாவன
    • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UN Environment Programme - UNEP) தயாரிக்கப்பட்ட வருடாந்திர உமிழ்வு இடைவெளி அறிக்கை.
    • காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change - IPCC) தொடர் அறிக்கைகள்.

காலநிலை மாற்ற செயல்பாட்டுக் குறியீடு

  • இது ஜெர்மனியில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஜெர்மன்வாட்ச் என்ற அமைப்பினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது 57 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு, உமிழ்வு மற்றும் காலநிலை கொள்கைகள் ஆகியவற்றை மதிப்பிடுகின்றது.
  • வழங்கப்பட்டுள்ள இந்தத் தரவரிசையில் முதல்முறையாக இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
  • மிக மோசமாக செயல்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதன்முறையாகச் சேர்க்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தையும் சீனா 30வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இருப்பினும், எந்தவொரு நாட்டாலும் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து தரங்களையும் 100% பூர்த்தி செய்ய முடியாததால், இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
  • இந்தப் பட்டியலின் தரவரிசையானது நான்காவது இடத்திலிருந்து தொடங்கப் பட்டு இருக்கின்றது. அவ்வாறு தொடங்கப்பட்டதில் ஸ்வீடன் முதலிடத்தில் உள்ளது.

பின்னணி

  • 1997 ஆம் ஆண்டின் கியோட்டோ நெறிமுறையை (2020 இல் முடிவுக்கு வருகின்றது) மாற்றுவதற்காக 2020 ஆம் ஆண்டில் பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
  • கியோட்டோ நெறிமுறையானது 1997 ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டோவில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • கியோட்டோ நெறிமுறையானது தொழில்துறை மயமாக்கப்பட்ட நாடுகளால் கார்பன் உமிழ்வைக் குறைந்தது 18% அளவிற்கு குறைப்பதற்கான இலக்கைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்