வளர்ச்சியடைந்த நாடுகளால் பாகுவில் நடைபெற்ற COP29 கூட்டத்தில், 2035 ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு வெறும் 300 பில்லியன் டாலர்களை மட்டுமே திரட்டுவதற்கு உறுதியளிக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வளந்து வரும் நாடுகள் NCQG இலக்கினை ஒவ்வோர் ஆண்டும் 1.3 டிரில்லியன் டாலர்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
இந்த இலக்கு அல்லது புதிய கூட்டு அளவுரு சார்ந்த இலக்கு (NCQG) ஆனது, 2025 ஆம் ஆண்டில் காலாவதியாகவிருக்கும் தற்போதைய 100 பில்லியன் டாலர் நிதி திரட்டல் இலக்கிற்கு மாற்றாகும்.
தற்போதைய வடிவத்திலான இந்த இலக்கு முன்மொழிவை இந்தியா ஏற்கவில்லை.
2009 ஆம் ஆண்டில், வளர்ச்சியடைந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர்களை திரட்ட முன் வந்தன.