ஐஐடி – தில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் அடங்கிய ஒரு குழுவுடன் இணைந்து எய்ம்ஸ் நிறுவனமானது (அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம்) “COPAL – 19”என்ற ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.
இது கோவிட் – 19 நோய்த் தொற்றிலிருந்து மீண்ட பின் தனது பிளாஸ்மாவைத் தானமாகக் கொடுக்க முன்வரும் நபர்களை அந்த பிளாஸ்மா தேவைப்படும் பயனாளிகள் கண்டறிய வழிவகை செய்கின்றது.