இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது CORBEVAX எனப்படும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மற்றொரு கோவிட்-19 தடுப்பு மருந்திற்கான இரண்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது BioE கோவிட்-19 தடுப்பு மருந்து எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த மருந்தானது அமெரிக்காவின் ஹூஸ்டன் என்னுமிடத்திலுள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரி மற்றும் அமெரிக்க நிறுவனமான டைனவாக்ஸ்டெக்னாலஜீஸ் ஆகியவற்றுடன் இணைந்து பயோலாஜிகல் E. லிமிடெட் எனப்படும் இந்திய உயிரி மருந்து நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
இது ஒரு புரத துணை அலகு தடுப்பு மருந்தாகும் (protein subunit vaccine).
இம்மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கும், 5 முதல் 18 வயதினர் மீது செலுத்தி 3 முறை பரிசோதிப்பதற்குமான ஒப்பந்தத்தினை பயோலாஜிகல் இ நிறுவனம் பெற்று உள்ளது.
மேலும், இந்தத் தடுப்பு மருந்தானது கோவிட்-19 சுரக்சா திட்டத்தின் கீழும் BIRAC எனும் தேசிய உயிரி மருந்து திட்டத்தின் மூலம் கோவிட்-19 ஆராய்ச்சி கூட்டமைப்பின் கீழும் நிதி உதவியைப் பெற்றுள்ளது.