உலக சுகாதார அமைப்பானது, 4வது வருடாந்திர நிலை அறிக்கையான ‘Countdown to 2023’ எனப்படும், உலக மாறுபக்கக் கொழுப்பு நீக்கம் குறித்த ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
உலகளவில் 5 பில்லியன் மக்கள் தீங்கு விளைவிக்கக் கூடிய மாறுபக்கக் கொழுப்பு அமிலங்களிலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்துப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நிலையில், இதன் விளைவாக இதய நோய் மற்றும் இறப்பு ஆகியவை ஏற்படுவதற்கான அபாயத்தை இது அதிகரிக்கிறது.
2018 ஆம் ஆண்டில் தொழில்துறை ரீதியாக தயாரிக்கப்பட்ட மாறுபக்கக் கொழுப்புகளை உலகளவில் முற்றிலும் நீக்கச் செய்வதற்கு முதன்முதலாக அழைப்பு விடுத்தது.
மேலும், இது ஒரு மாறுபக்கக் கொழுப்பு நீக்கத்திற்கான இலக்கு ஆண்டாக 2023 ஆம் ஆண்டினை அறிவித்தது.
43 நாடுகள், உணவில் உள்ள மாறுபக்கக் கொழுப்பின் அளவினைக் கட்டுப்படுத்தச் செய்வதற்கான சிறந்த நடைமுறைக் கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.