TNPSC Thervupettagam

CoViNet – உலக சுகாதார அமைப்பு (WHO)

April 8 , 2024 102 days 192 0
  • உலக சுகாதார அமைப்பானது குறுகிய காலத்தில் பெருகக் கூடிய புதிய கொரோனா வைரஸ்களைக் கண்டறிந்து அதனைக் கண்காணிப்பதற்காக CoViNet (கோவிநெட்) எனப்படும் உலகளாவிய ஆய்வக வலையமைப்பினைத் தொடங்கியுள்ளது.
  • பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS-CoV) மற்றும் புதிய கொரோனா வைரஸ் ஆகியவற்றினைக் கண்காணிப்பதற்காக மேலும் பல ஆய்வகங்களை உருவாக்குவதற்கு இந்த வலையமைப்பு துணை புரிகிறது.
  • கோவிநெட் (CoViNet) ஆனது மூன்று இந்திய ஆய்வகங்கள் உட்பட உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் உள்ள 21 நாடுகளைச் சேர்ந்த 36 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்