TNPSC Thervupettagam
February 18 , 2018 2345 days 704 0
  • இந்திய மண்டலத்திற்கான காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் 6-வது கருத்தரங்கை (India region Commonwealth Parliamentary Association) பீகாரிலுள்ள பாட்னாவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தொடங்கி வைத்துள்ளார்.
    • வளர்ச்சிக்கான நிரல்களில் (Agenda) பாராளுமன்றத்தின் பங்கு.
    • சட்டஅவை மற்றும் நீதிமன்ற அமைப்பு - ஜனநாயகத்தின் இரு முக்கிய தூண்கள்.
எனும் இரு தலைப்புகளின் மீது  இக்கருத்தரங்கில் விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்திய மண்டல காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் கருத்தரங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
  • இதன் 5 வது கருத்தரங்கு 2015-ல் கோவாவில் நடைபெற்றது.
CPA பற்றி
  • நாடாளுமன்ற பேரரசுச் சங்கம் (Empire parliamentary Association) என்று இதற்கு முன் அழைக்கப்பட்டு வந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கமானது (Commonwealth Parliamentary Association) மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் நல் ஆளுகை ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்படும் அமைப்பாகும்.
  • காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கமானது உலகில் ஒன்பது பிராந்தியங்களில் செயல்படுகின்றது.
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • பிரிட்டன் ஆளுகைக்குட்பட்ட தீவுகள் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதி
    • அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக்
    • இந்தியா
    • கனடா
    • பசுபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா
    • கரிபியன் தீவுகள்
  • காமன்வெல்த் பாராளுமன்ற சங்கமானது இந்திய யூனியனின் நாடாளுமன்றத்தையும், 29 மாநில மற்றும் இரு யூனியன் பிரதேச சட்டமன்றங்களையும் உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்