மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது நீர் (மாசுக் கட்டுப்பாடு & தடுப்பு) சட்டம், 1974 என்பதின் கீழ் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஏற்படுத்தப்பட்டது.
இது காற்று (மாசுக் கட்டுப்பாடு & தடுப்பு) சட்டம், 1981 என்பதின் கீழ் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பெறுகின்றது.
இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 என்ற சட்டத்தின் விதிமுறைகளின் கீழ், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்குத் தொழில்நுட்ப சேவைகளை அளிப்பதற்காகவும் பகுதிகளை உருவாக்குவதற்காகவும் வேண்டி பணியாற்றுகின்றது.