நீர்வளத் தரத் தரவுகளின் அடிப்படையில் சென்னை மற்றும் சேலத்தில் உள்ள ஆறுகள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் (CPCB) "முன்னுரிமை நதி வழித் தடங்கள்" ஆக அடையாளம் காணப்பட்டுள்ளன.
CPCB வாரியத்தின் படி, தமிழ்நாட்டில் மிக மோசமாக மாசுபட்ட 10 நதி வழித் தடங்கள் உள்ளன என்பதோடு அவை முன்னுரிமை I முதல் V வரை வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இவற்றில், சென்னையில் உள்ள அடையாறு மற்றும் கூவம் நதிகள், சேலத்திற்கு அருகிலுள்ள திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்ட ஆறுகள் முன்னுரிமை I எனும் பிரிவில் அடங்கும்.
ஆவடி முதல் சத்யா நகர் வரையிலான கூவம் நதியின் வழித் தடமானது, குளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீருக்கு அனுமதிக்கப்பட்ட 3 மி.கி/லி. என்ற வரம்பினை விட மிக அதிகமாக 345 மி.கி/லி என்ற உயிரிய உயிர்வளித் தேவையுடன் மோசமாக மாசுபட்டு உள்ளது.