பாகிஸ்தான் 50 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்புடைய சீனா-பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப்பாதையில் மூன்றாவது யுக்திசார் பங்குதாரராக இணைய சவுதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.
பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் இம்ரான் கான் தான் மேற்கொண்ட முதல் அலுவலக வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியாவிற்கு சென்று வந்ததற்கு பிறகு இது குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த CPEC (China Pakistan Economic Corridor) பெருவழிப்பாதையில் பங்குதாரராக இணைவதற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்த முதல் நாடு சவுதி அரேபியா ஆகும்.