TNPSC Thervupettagam

CPI உருவாக்கப்பட்டதன் 100வது ஆண்டு விழா

December 28 , 2024 25 days 159 0
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இந்தியாவின் பழமையான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
  • CPI ஆனது, 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று நவீனகால கான்பூர் நகரில் நிறுவப் பட்டது.
  • CPI ஆனது பிரிட்டிஷ் கால காலனித்துவத்திற்கு எதிர்ப்பு, சாதி அமைப்புக்கு எதிரான போராட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபட்டது.
  • மதராசினைச் சேர்ந்த மலையபுரம் சிங்காரவேலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரானார்.
  • கான்பூரில் நடைபெற்ற அதன் தொடக்க மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • 1964 ஆம் ஆண்டில் CPI கட்சியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனியாகப் பிரிந்தது.
  • இது 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன நாளாகக் கருதுகிறது.
  • இந்த நாளில், M.N. ராய், ஈவ்லின் ட்ரென்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷஃபீக், மற்றும் M.P.T.ஆச்சார்யா ஆகியோர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க என உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் கூடினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்