இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இந்தியாவின் பழமையான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
CPI ஆனது, 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று நவீனகால கான்பூர் நகரில் நிறுவப் பட்டது.
CPI ஆனது பிரிட்டிஷ் கால காலனித்துவத்திற்கு எதிர்ப்பு, சாதி அமைப்புக்கு எதிரான போராட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபட்டது.
மதராசினைச் சேர்ந்த மலையபுரம் சிங்காரவேலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரானார்.
கான்பூரில் நடைபெற்ற அதன் தொடக்க மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார்.
1964 ஆம் ஆண்டில் CPI கட்சியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனியாகப் பிரிந்தது.
இது 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன நாளாகக் கருதுகிறது.
இந்த நாளில், M.N. ராய், ஈவ்லின் ட்ரென்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷஃபீக், மற்றும் M.P.T.ஆச்சார்யா ஆகியோர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க என உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் கூடினர்.