இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI - consumer Price Index) 2020-21 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 4.8 சதவீதத்திலிருந்து இரண்டாம் காலாண்டில் 4.4 சதவீதமாகக் குறையும் என்று கணித்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் குறைப்பானது மொத்தத் தேவை மேலும் வலுவிழப்பதைக் குறிக்கின்றது.
தற்பொழுது இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் இலக்காகக் கொண்ட பணவீக்க விகிதத்தைப் பின்பற்றுகின்றது.
பணவீக்க விகிதம் 4 சதவீதத்தை மையமாகக் கொண்டு +2 என்ற ஏறுமுகம் மற்றும் -2 என்ற இறங்கு முகம் என்று இரண்டு நிலையிலும் விகித வரம்பு கொண்டு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது இந்திய ரிசர்வ் வங்கியானது பணவீக்க விகிதத்தை இரண்டு மற்றும் ஆறு சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பணவீக்க இலக்கானது 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.