CRISIL (formerly Credit Rating Information Services of India Limited) மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் (SIDBI- Small Industries Development Bank of India) உருவாக்கப்பட்ட CriSidEX என்ற சிறு, குறு, தொழிற் நிறுவனங்களுக்கான (Micro and Small enterprises-MSEs) இந்தியாவின் முதல் தொழில் உணர்வுக் குறியீட்டை (Sentiment Index) மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
8 அளவுருக்களின் அடிப்படையில் பூஜ்ஜியம் மற்றும் 200 வரையிலான மதிப்பீட்டளவில் சிறு குறு நிறுவனங்களின் வணிக உணர்வுகளை (business sentiment) கணக்கிடும் ஓர் கூட்டுக் குறியீடே CriSidEX ஆகும்.
இக்குறியீட்டின் வழியே பெறப்படும் மதிப்பீடானது சிறு, குறு தொழிற்சாலைகளின் வணிகத்தில் உள்ள முக்கிய சிக்கல்கள் மற்றும் உற்பத்தி சுழற்சியில் உள்ள மாற்றங்களை அடையாளப்படுத்த உதவும்.
இது நிறுவனங்களின் சந்தை செயல்திறனை (market efficiencies) அதிகரிக்க உதவும்.