TNPSC Thervupettagam
October 31 , 2017 2615 days 2256 0
  • அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக வெற்றிகரமாக மரபு வழி நோய்களை உண்டாக்கும் குறைபாடுடைய கரு அமிலங்களினை (டி.என்.ஏ) சரி செய்ய மனிதக் கருமுட்டையில் மேல் மரபணுவை திருத்தும் (எடிட்டிங்) தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்த செயல் முயற்சியில் CRISPR எனும் மரபணு திருத்து தொழிற்நுட்பத்தின் மூலம் ஒற்றை செல் கருமுட்டைகளின் மரபு வழி நோயுண்டாக்கும் குறைபாடுடைய பெரும் எண்ணிக்கையிலான DNA-க்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
  • CRISPR என்பதன் விரிவாக்கம் Clustered Regularly Interspaced Short Palindromic Repeats என்பதாகும்.
  • CRISPR – Cas9 என்பது செல்களில் உள்ள மரபணு குறியீட்டினுடைய குறிப்பிட்ட நீட்சித் தொடரினை(Sequence) இலக்கிட்டு அவற்றிலுள்ள மரபணு வாக்கியத்தில் அமைந்துள்ள DNAக்களை திருத்தம் செய்ய உதவும் மிக முக்கியமான மரபணு திருத்தத் தொழிற்நுட்பமாகும்.
  • CRISPR – என்பது DNA வாக்கியங்களின் தொகுப்பாகும். இவை Cas9 எனும் மரபியற் புரத கத்திரிகளை மரபணு வாக்கியங்களை எங்கு வெட்ட வேண்டும், எங்கு ஒட்ட வேண்டும் என வழி நடத்தும், DNAவை திருத்தியமைக்க உதவும் ஓர் நொதியாகும்.
  • இந்தத் தொழிற்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு மரபு வழி நோய்களை குணப்படுத்த மனித ஜீனோம்களின் துல்லியமான இடங்களில் மரபணு பிறழ்வுகளை சரி செய்யவும், உயிரி செல்கள் மற்றும் உயிரினங்களின் மரபணுக்களை நிரந்தரமாக திருத்தியமைக்கவும் உதவும்.
  • DNAக்களை வெட்டுவதற்கு பதிலாக மரபணு வெளிப்பாடுகளை செயல்படுத்தவும், ஒரே நேரத்தில் பல்வேறு மரபணுக்களை இலக்கிடவும் இத்தொழிற்நுட்பம் பயன்படும்.
  • CRISPR – Cas9 தொழிற்நுட்பமானது இரத்த நோய்கள், நோய் கட்டிகள் மற்றும் பிற மரபியற் நோய்களின் சிகிச்சைகளில் புரட்சியைத் தோற்றுவிக்கும் ஆற்றலுடையவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்