அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக வெற்றிகரமாக மரபு வழி நோய்களை உண்டாக்கும் குறைபாடுடைய கரு அமிலங்களினை (டி.என்.ஏ) சரி செய்ய மனிதக் கருமுட்டையில் மேல் மரபணுவை திருத்தும் (எடிட்டிங்) தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த செயல் முயற்சியில் CRISPR எனும் மரபணு திருத்து தொழிற்நுட்பத்தின் மூலம் ஒற்றை செல் கருமுட்டைகளின் மரபு வழி நோயுண்டாக்கும் குறைபாடுடைய பெரும் எண்ணிக்கையிலான DNA-க்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
CRISPR என்பதன் விரிவாக்கம் Clustered Regularly Interspaced Short Palindromic Repeats என்பதாகும்.
CRISPR – Cas9 என்பது செல்களில் உள்ள மரபணு குறியீட்டினுடைய குறிப்பிட்ட நீட்சித் தொடரினை(Sequence) இலக்கிட்டு அவற்றிலுள்ள மரபணு வாக்கியத்தில் அமைந்துள்ள DNAக்களை திருத்தம் செய்ய உதவும் மிக முக்கியமான மரபணு திருத்தத் தொழிற்நுட்பமாகும்.
CRISPR – என்பது DNA வாக்கியங்களின் தொகுப்பாகும். இவை Cas9 எனும் மரபியற் புரத கத்திரிகளை மரபணு வாக்கியங்களை எங்கு வெட்ட வேண்டும், எங்கு ஒட்ட வேண்டும் என வழி நடத்தும், DNAவை திருத்தியமைக்க உதவும் ஓர் நொதியாகும்.
இந்தத் தொழிற்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு மரபு வழி நோய்களை குணப்படுத்த மனித ஜீனோம்களின் துல்லியமான இடங்களில் மரபணு பிறழ்வுகளை சரி செய்யவும், உயிரி செல்கள் மற்றும் உயிரினங்களின் மரபணுக்களை நிரந்தரமாக திருத்தியமைக்கவும் உதவும்.
DNAக்களை வெட்டுவதற்கு பதிலாக மரபணு வெளிப்பாடுகளை செயல்படுத்தவும், ஒரே நேரத்தில் பல்வேறு மரபணுக்களை இலக்கிடவும் இத்தொழிற்நுட்பம் பயன்படும்.
CRISPR – Cas9 தொழிற்நுட்பமானது இரத்த நோய்கள், நோய் கட்டிகள் மற்றும் பிற மரபியற் நோய்களின் சிகிச்சைகளில் புரட்சியைத் தோற்றுவிக்கும் ஆற்றலுடையவை.