இந்திய ரிசர்வ் வங்கியானது தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான CSB வங்கியை 'முகமை வங்கி' என்ற பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நியமனத்தின் மூலம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வழிகாட்டுதலின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது வங்கி வணிகத்தை CSB வங்கி மேற்கொள்ளும்.
CSB வங்கி லிமிடெட் (முன்னதாக கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் என அழைக்கப் பட்டது) என்பது கேரளாவின் திருச்சூர் நகரில் தன் தலைமையகத்தைக் கொண்ட ஒரு இந்தியத் தனியார் துறை வங்கியாகும்.