அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) இந்தத் திட்டத்தினை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ஆம் தேதியன்று தொடங்கியுள்ளது.
PI-CHeCK திட்டம் ஆனது இந்திய மக்களிடையே தொற்றாத (இருதய-வளர்சிதை சார்ந்த) நோய்களில் உள்ள அபாயக் காரணிகளை மதிப்பிடுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தனித்துவமான முன்னெடுப்பில், ஒரு விரிவான சுகாதாரத் தரவை வழங்கச் செய்வதற்காக முன் வந்துள்ள 10,000 பங்கேற்பாளர்கள் சேர்ந்துள்ளனர்.
தற்போது, அவர்கள் அந்தத் திட்டத்தின் தொடர் சுகாதாரக் கண்காணிப்புத் திட்டத்தின் 'Phenome India-CSIR சுகாதார கூட்டு ஆய்வுத் தகவல் தளம்' (PI-CheCK) என்ற முதல் கட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இந்தக் குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கோவாவில் உள்ள தேசியப் பெருங்கடலியல் நிறுவனத்தில் (NIO), 'Phenome India Unboxing 1.0' என்ற ஒரு நிகழ்வை CSIR ஏற்பாடு செய்தது