அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவின் (Council for Scientific Industrial Research) ஆய்வுக் கூடங்களில் கண்டறியப்படும் தொழிற்நுட்பங்களை ஆய்வுக் கூடங்களிலிருந்து வெளிக் கொண்டு வந்து அவற்றை தொழிற்துறையின் நன்மைக்கு தொழிற்பயன்பாடுகளாக (Realization of Technology) மாற்றுவதற்கு, சிறு தொழிற்துறையுடன் (Small-Scale Industry) தொடர்பு கொள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகமானது CSIR-ல் ஓர் தொடர்புகொள் தொழிற்முறையை (Communicative Mechanism) அமைத்துள்ளது.
சிறு தொழிற்சாலை துறையானது நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகளவில் வேலை வாய்ப்பினை வழங்கும் துறையாகும்.
சிறு தொழிற்சாலைகள் துறைகளானது நாட்டின் பொருளாதாரத்தில் 40 சதவீதம் மொத்த தொழிற்துறை மதிப்புகளை (Gross Industrial Value) வழங்குகின்றது.
CSIR பற்றி
CSIR ஆனது தன்னாட்சியுடைய, நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research & Development) நிறுவனமாகும்.
இது 1942ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1860ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act-1860) கீழ் அமைக்கப்பட்ட ஓர் தன்னாட்சியுடைய ஆராய்ச்சி நிறுவனமாகும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகின்றது.