TNPSC Thervupettagam

CSIRன் அணு காந்த ஒத்ததிர்வு பரிசோதனை - அமெரிக்காவின் USFDA சான்றிதழ்

December 10 , 2019 1719 days 547 0
  • ஹைதராபாத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் – இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனமானது (CSIR - Indian Institute of Chemical Technology), அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் CSIRன் அணு காந்த ஒத்ததிர்வு பரிசோதனைக்கு (Nuclear Magnetic Resonance - NMR) அனுமதி அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • தற்போதைய சிறந்த உற்பத்தி நடைமுறைகள் தொடர்பாக இந்த ஆய்வானது நடத்தப் பட்டது. இந்தச் சோதனையின் போது “எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை” என்று இதற்குச் சான்றிதழ் வழங்கப் பட்டது.

NMR

  • அணு காந்த ஒத்ததிர்வு என்பது ஒரு மாதிரியின் தூய்மை மற்றும் அதன் மூலக்கூறு அமைப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்காக உள்ள ஒரு பகுப்பாய்வு உத்தியாகும்.
  • அணுக் கருக்களைச் சுற்றியுள்ள உட்புற காந்தப் புலங்களைக் கண்காணிப்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப் படுகின்றது.
  • உயிர் வேதியியலாளர்கள் புரதங்கள் மற்றும் பிற சிக்கலான மூலக்கூறுகளை அடையாளம் காண NMR உத்தியைப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்