ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்க உள்ள காமன்வெல்த் தொடக்க விழாவில்V சிந்து இந்திய அணிக்காக இந்தியக் கொடியைத் தாங்கிப் பிடித்து செல்லவுள்ளார்.
கிளாஸ்கோவில் 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் V சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கடந்த மூன்று காமன்வெல்த் போட்டிகளில், கொடிதாங்கிச் செல்லும் கவுரவப் பொறுப்பு, சுடுதல் விளையாட்டுப் பிரிவு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு மெல்பர்னில் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இரட்டை டிராப் துப்பாக்கி சுடுதல் வீரரும் (Double Trap Shooter) தற்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருமான ராஜ்ய வரதன் சிங் ரத்தோர் இந்தியக் கொடியைத் தாங்கிச் செல்லும் பொறுப்பைப் பெற்றார்.
2010ல் இந்தியாவில் நடந்த போட்டிகளின் போது இப்பொறுப்பை 2008 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சாம்பியனான அபினவ் பிந்த்ரா பெற்றார்.
துப்பாக்கிச் சுடுதல் வீரர் விஜய் குமார் இவ்வாய்ப்பை 2014ல் பெற்றார்.