TNPSC Thervupettagam
May 20 , 2024 59 days 93 0
  • உலகளாவிய 64 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களானது 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய 2000 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
  • அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமானது முதலிடத்தைப் பெற்று உள்ளது.
  • இந்த ஆண்டு, அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிலை சற்று முன்னேறி 410வது தரவரிசையைப் பெற்றுள்ளது.
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் 7 இடங்கள் சரிந்து தற்போது 501வது இடத்தில் உள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது உலகளவில் 582வது இடத்திலும், இந்திய அளவில் 4வது இடத்திலும் உள்ளது.
  • அண்ணா பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்