TNPSC Thervupettagam
November 19 , 2021 1011 days 513 0
  • நேரடியாக மேலெழும்பும்  செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையினை  (DA-ASAT) ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.
  • DA-ASAT ஏவுகணையானது காஸ்மோஸ் 1408 என்ற ஒரு ரஷ்யச் செயற்கைக்கோளை தாக்கியதன் விளைவாக, தாழ்மட்டப் புவி சுற்றுப் பாதையில் விண்கழிவுப் பொருள்கள் குவிந்தன.
  • இந்தச் சோதனையானது இதுவரையில் சுமார் 1500 என்ற எண்ணிக்கையில் கண்காணிக்கும் வகையிலான சுற்றி வரக் கூடிய விண்கழிவுப் பொருள்களை  உருவாக்கியுள்ளது.
  • எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகள், நூற்றாயிரக்கணக்கான சிறிய, சுற்றி வரக் கூடிய  விண்கழிவுப் பொருள்களை  உருவாக்கும்.
  • USSPACECOM என்ற அமைப்பின் ஆரம்பக் கட்ட மதிப்பீட்டின்படி, இந்த விண்கழிவுப் பொருள்கள் பல ஆண்டுகளாக சுற்றுப்பாதையில் சுற்றி வரும் எனக் கூறப்படுகிறது.
  • இதன் விளைவாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள பணியாளர்களுக்கு இது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்