TNPSC Thervupettagam

DARPAN – கிராமப்புற நிதியியல் உள்ளடக்கம்

December 22 , 2017 2578 days 902 0
  • மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமானது வங்கிகளில்லா கிராமப்புற பகுதிகளில் மக்களை நிதியியல் வட்டத்தினுள் உள்ளடக்குவதற்காக (Financial inclusion) DARPAN எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • புதிய இந்தியாவிற்கான டிஜிட்டல் மேம்பாட்டுத் தொழிற்நுட்பமுடைய கிராமப்புற அஞ்சல் அலுவலகம் (Digital Advancement of Rural Post office for A New India) என்பதன் ஆங்கிலச் சுருக்கமே DARPAN ஆகும்.
  • இதுவரை DARPAN திட்டத்தின் கீழ் 43,171 அஞ்சல் அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. மேலும் அஞ்சல் அலுவலகங்களின் மெயில் சேவை நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அஞ்சல் துறையின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும். மேலும், ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு, பண பரிவர்த்தனை, சேமிப்பு கணக்குகள், நிதி போன்ற அனைத்து அஞ்சல்துறை நிதிச் சேவைகளின் மீதான செயல்பாடுகளும் அதிகரிக்கப்படும்.
  • தினசரி பரிவர்த்தனை அறிக்கை (daily transaction Report), சிறு அறிக்கை (Mini Statement) உயர் மதிப்பிலான பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுத்தல், சேமிப்பு வைப்பு (Saving Deposit) மற்றும் தொடர் வைப்பு (Recuring Deposit) போன்றவற்றில் புதிய கணக்குகளைத் துவங்குதல், சேமிப்பு வைப்பிலிருந்து பணமெடுத்தல், சேமிப்பு மற்றும் தொடர் வைப்பு நிதிகளில் பணம் செலுத்துதல் (Cash Deposit) போன்ற முக்கிய வங்கி சேவைகளை DARPAN அஞ்சல் அலுவலக தொடக்கம் மூலம் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்