TNPSC Thervupettagam

DBS வங்கி – 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வங்கி

June 17 , 2021 1131 days 559 0
  • ஃபோர்ப்ஸ் (Forbes) வர்த்தக இதழின் 2021 ஆம்  ஆண்டிற்கான உலகின் சிறந்த வங்கிகள் பட்டியலில் DBS வங்கியானது இடம் பெற்றுள்ளது.
  • தொடர்ந்து இரண்டாவது வருடமாக DBS வங்கியானது இந்தியாவிலுள்ள 30 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  வங்கிகளுள் முதல் இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இது உலகின் சிறந்த வங்கிகளுக்கான போர்ப்ஸ் இதழின் 3வது பதிப்பாகும்.
  • இது சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டேட்டிஸ்டா (Statista) என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப் பட்டது.
  • சமீபத்தில் DBS வங்கியானது ஆசியா மணி என்ற இதழினால் ‘2021 ஆம் ஆண்டிற்கான  இந்தியாவின் சிறந்த சர்வதேச வங்கிஎன அங்கீகரிக்கப்பட்டது.
  • DBS வங்கியானது 2020 ஆம் ஆண்டில் நியூயார்க்கைச் சேர்ந்த வர்த்தக இதழான குளோபல் பைனான்சினுடைய உலகின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியலில் தொடர்ந்து 12வது ஆண்டாக இடம் பெற்றது.
  • மேலும் அதே ஆண்டில் DBS வங்கியானது உலகின் சிறந்த வங்கியாகவும் குளோபல் பைனான்ஸ் என்ற இதழினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இதற்கு முன்பாக DBS வங்கியானது 2019 ஆம் ஆண்டில் யூரோமணி எனப்படும் முன்னணி நிதி இதழினால்உலகின் சிறந்த வங்கிஎனப் பட்டியலிடப்பட்டது.
  • DBS வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா என்பவராவார்.
  • இதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது.
  • இதன் முழக்கம் “Make Banking Joyful” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்