DBS வங்கி – 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வங்கி
June 17 , 2021 1259 days 606 0
ஃபோர்ப்ஸ் (Forbes) வர்த்தக இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வங்கிகள் பட்டியலில் DBS வங்கியானது இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வருடமாக DBS வங்கியானது இந்தியாவிலுள்ள 30 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுள் முதல் இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது உலகின் சிறந்த வங்கிகளுக்கான போர்ப்ஸ் இதழின் 3வது பதிப்பாகும்.
இது சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டேட்டிஸ்டா (Statista) என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப் பட்டது.
சமீபத்தில் DBS வங்கியானது ஆசியா மணி என்ற இதழினால் ‘2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த சர்வதேச வங்கி’ என அங்கீகரிக்கப்பட்டது.
DBS வங்கியானது 2020 ஆம் ஆண்டில் நியூயார்க்கைச் சேர்ந்த வர்த்தக இதழான குளோபல் பைனான்சினுடைய உலகின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியலில் தொடர்ந்து 12வது ஆண்டாக இடம் பெற்றது.
மேலும் அதே ஆண்டில் DBS வங்கியானது உலகின் சிறந்த வங்கியாகவும் குளோபல் பைனான்ஸ் என்ற இதழினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கு முன்பாக DBS வங்கியானது 2019 ஆம் ஆண்டில் யூரோமணி எனப்படும் முன்னணி நிதி இதழினால் ‘உலகின் சிறந்த வங்கி’ எனப் பட்டியலிடப்பட்டது.
DBS வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா என்பவராவார்.